கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி
#திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர்
#விடுதலை_இராசேந்திரன்”

“YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது?

ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில்,
1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள்,
2. அவர்களின் அவதார மகிமைகள்,
3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள்
இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி விளக்கங்களை அளித்திருக்கிறது இந்த youtube channel.

சிவ புராணம், விஷ்ணு புராணம், லிங்க புராணம், கந்த புராணம், மச்ச புராணம் என்று ஏராளமான புராண நூல்கள் எழுதப்பட்டு, அவை இப்போதும் அச்சிடப்பட்டு சந்தையில் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த புராணங்களில், பக்தியை பரப்புகின்றவர்கள் எழுதி வைத்த கடவுள்களின் கதைகளை எடுத்துப் பேசுவதே ஆபாசம் என்றும், ஹிந்துக்களை புண்படுத்துவது என்றும் பாஜக கூறுகிறது என்று சொன்னால், பாஜகவே ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்துகிறது; அவற்றின் புனிதத்தை கெடுக்கிறது என்று நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

இல்லாவிட்டால், “இவை ஒரு காலத்தில், பழங்காலத்தில் எழுதப்பட்ட புராணங்கள், இவை காலத்துக்கு பொருந்தாதவை, இவற்றில் கூறப்பட்டுள்ள கதைகள், புராண மகிமைகள் அத்தனையும் இப்போது அறிவியலுக்கு எதிரானவை” என்று கூறி, இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பாஜக கோரியிருந்தால், அதில் ஒரு நியாயம் உண்டு.

அவை தடை செய்யப்படவில்லை. இப்போதும் அப்படியே விற்பனை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ராமன் எப்படி பிறந்தான் என்று வால்மீகி ராமாயணம் விவரித்து கூறுகிறது. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராமனுடைய பிறப்பை அப்படியே அதன் ஸ்லோகங்களோடு எடுத்துக் காட்டி கூறினால், அதுவும் ஆபாசம் என்று தான் பாஜக காரர்களுக்கு தெரியும். அப்படியானால், வால்மீகி ராமாயணத்தையும் தடை செய்தாக வேண்டும்.

அப்படி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காமல், அவற்றை சந்தைகளிலும் விற்பனை செய்து கொண்டு, அந்த நூல்கள் ஹிந்து மதத்தினுடைய நூல்கள் என்று அங்கீகரித்துக் கொண்டு, அந்த நூல்களில் உள்ள கருத்துகளை எடுத்துப் பேசினால் மட்டும், அது ஹிந்து கடவுள்களை ஆபாசப் படுத்துகிறது என்று சொன்னால், இது என்ன இரட்டை வேடம் என்று தான் நாம் கேட்க வேண்டியுள்ளது.

காலத்துக்கு ஏற்ப கடவுள்களையும் புராணங்களையும் மாற்றிக்கொண்டு தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வேதத்தில் சொல்லப்பட்ட பல கடவுள்கள் இப்போது காணாமல் போய் விட்டன. வேதத்தில் தியோசன், மித்திரன், சாவித்ரி, பூசன், ஆதித்யன், மாருத்யன், அதிதி, திதி, ஊர்வசி என்று கடவுள்களை பற்றி குறிப்புகள் வருகின்றன. கோயில்கள், விக்கிரக வழிபாடுகள் வந்த பிறகு, அந்த கடவுள்கள் அத்தனையையும், வேத புரோகித பார்ப்பனர்கள், அப்படியே தூக்கி வீசி விட்டார்கள். இப்போது அந்த கடவுள்கள் புழக்கத்தில் இல்லை; வணங்கப்படுவதும் இல்லை.

ஒன்று வேண்டுமானால் செய்யலாம். ஹிந்து கடவுள்களுக்கு, அவர்களின் அவதார பிறப்பு மகிமைகள் குறித்து, காலத்துக்கு ஏற்ப புதிய கதைகளை எழுதி உருவாக்கி, இனிமேல் இது தான் கிருஷ்ணன் பிறந்த கதை; இது தான் விநாயகன் பிறந்த கதை; இது தான் பார்வதி சிவனுடைய வரலாறு என்றெல்லாம் அவர்கள் புதிய கதைகளை உருவாக்கி, ஹிந்து புராணக் கட்டமைப்பை காலத்துக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்கிற முயற்சியில் ஈடுபட்டு, அதை அத்தனை ஹிந்துக்களும் ஏற்றுக்கொண்டு, இது தான் ஹிந்துக்களுடைய கடவுள் என்று அறிவித்து விட்டு, இந்த youtube channel மீது அவர்கள் வழக்கை தொடர்ந்தால், அதை நாம் வரவேற்க முடியும்.

இல்லாவிட்டால், இது இவர்களுடைய (பாஜக) இரட்டை வேட போக்கைத் தான் காட்டுகிறது !!”

You may also like...