இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்
கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார்.
27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி Stream Yard வழியாக இணையர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
பெரியார் முழக்கம் 22102020 இதழ்