தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !*
கிரிமினல் வழக்குகள் பதிவு !
*திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !*

நூலின் மீதான தடையை நீக்கவும்,
தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !*

தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல்.

வேதங்களின் காலம்,
வேதங்களின் உள்ளடக்கம்,
பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள்,
சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?,
ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம் குறித்து தெரிவித்த கருத்துக்கள்,
வேதங்களைப் பற்றி அதை எதிர்த்து அயோத்திதாச பண்டிதர்,ராமலிங்க அடிகளார் மறைமலையடிகளார்,புரட்சியாளர் அம்பேத்கார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, டி.டி.கோசாம்பி,ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், ரோமிலா தாப்பர் போன்ற அறிஞர்களின் கருத்துகளையெல்லாம் தொகுத்து எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசு அதுவும் அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிற ஒரு அரசு தடை போடுகிறது என்றால் இது வேத காலத்திலும் கூட நடக்க முடியாத மிகப்பெரிய கொடுமை.

தமிழ்நாடு அரசு இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும்.தமிழ் நாட்டிற்கே மிகப்பெரிய தலைகுனிவை கேவலத்தையும் உருவாக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு.

பொழிலன் ஒரு தனி மனிதர் அல்ல,
அவர் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
வீண் வம்புகளை தமிழக அரசு விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

– *தோழர் விடுதலை ராஜேந்திரன்,* *பொதுச்செயலாளர்,*
*திராவிடர் விடுதலை கழகம்.*
29.112020

You may also like...