‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

சர்வதேச சமூக நீதி நாளான பிப்ரவரி 20 – முன்னிட்டு 20.02.2021 அன்று 25க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய தேசிய பிற்படுத்தப்படட ஊழியர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஓய்வறியா இட ஒதுக்கீட்டு போராளி, மண்டல் குழு அமைக்கக் காரணமான முன்னோடிகளில் ஒருவருமான, சீரிய பெரியார் கொள்கை செயல்பாட்டாளர், 96 வயதாகும் அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு வாழ்நாள் சமூக நீதி சாதனையாளர் விருது வழங்கியும், அவருடைய சீரிய பணியினை பாராட்டும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் ஆச்சாரி தல்லொஜு, பெல் ராணிப் பேட்டை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பேரமைப்பின் நிர்வாகிகளான கு.தனசேகர், சி.சேதுபதி , ஆர்.அப்சல், ஆர்.செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.

பெல் இராணிப்பேட்டை கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பெல் தொழிலாளர்களும் சமூக நீதி ஆதரவாளர்களும் பங்கேற்றனர். முன்னதாக பெல் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட புதிய அலுவலகத்தினையும் அய்யா ஆனைமுத்து திறந்து வைத்தார்.

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...