கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

திருவல்லிக்கேணி : திராவிடர் விடுதலைக் கழகம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 21ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் 13.01.2021 அன்று மாலை 6 மணியளவில் வி.எம். சாலை, பெரியார் படிப்பகம், பத்ரிநாராயணன் நூலகம் வாயிலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பறையிசையுடன் தொடங்கியது. சமரன் கலைக் குழுவின் பறையிசை, சிலம்பாட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம், கிராமியப் பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நிகழ்ந்தன.

நிகழ்வில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, தமிழர் திருநாள், பொங்கல் தினம் குறித்து  உரையாற்றினார். தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர் கா.வே. செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கொரோனா காலத்திலும் நிகழ்விற்கு, நிதி யுதவி வழங்கி ஊக்கப்படுத்திய பகுதி மக்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு, திருவல்லிக் கேணி பகுதி தோழர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

மயிலாப்பூர் : மயிலை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம்  5 ஆம் ஆண்டு பொங்கல் விழா 14.01.2021 அன்று காலை 8:30 மணியளவில்  மந்தைவெளி பெரியார் படிப்பகம் அருகில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்வு பறையிசையுடன் தொடங்கியது. திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையைச்  செயலாளர் தபசி குமரன்,சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் திமுக சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப் பாளர் த. வேலு, திமுக மயிலை பகுதி வட்டச் செயலாளர் மூ.இராஜேந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக, 10.01.2021 அன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பொங்கல் நிகழ்வன்று பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வை மயிலை பகுதி தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

மேட்டூர் : தை-1 தமிழர் திருநாளில் 14.01.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்  மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக பறை முழக்கத்துடன் விழா தொடங்கியது. அதன் பிறகு பொது மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

மேட்டூர் பெரியார் படிப்பகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. படிப்பகத்தின் முகப்பில் பொங்கல் விழா வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேட்டூர் நகர செயலாளர் – பிரதாப், நகர தலைவர் அம்ஜத் கான், பொருளாளர் – காளியப்பன் மற்றும் சந்தானபாரதி, விஜய், பிரமோத், கோகுல், மா.பிரபாகரன், நா.பிரபாகரன் ஸ்ரீகாந்த், மு. திவாகர் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்  சூரியகுமார்,  மாவட்ட செயலாளர்  கோவிந்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். படிப்பகத்தின் அருகாமையில் யாழிசை நண்பர்கள் குழு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்  சி.கோவிந்தராசு, திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் கீதாபாலு  மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 21012021 இதழ்

You may also like...