மணப்பாறையில் கழகக் கூட்டம்: கொளத்தூர் மணி சிறப்புரை
மணப்பாறையில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘திராவிடத்தை ஆதரிப்போம்’ விளக்கப் பொதுக்கூட்டம் 3.2.2021 அன்று மாலை 6 மணியளவில் மணப்பாறை தந்தை பெரியார் சிலை அருகில் பெரியார் பெருந்தொண்டர் டைலர் சேகர் நினைவு திடலில் நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒன்றிய அமைப்பாளர் வீ.தனபால் வரவேற்புரையாற்றினார். மணவை சீரா. ஆனந்தன் (ஒன்றிய பொருளாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சந்துரு (வழக்கறிஞர் திராவிடர் விடுதலைக் கழகம், திருச்சி, மாதம்பட்டி), கார்த்திகேயன் (மணப்பாறை நகர அமைப்பாளர்), விஜயகுமார் (கடவூர் பகுதி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்), விஜயா மோகன் (கடவூர் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பகுத்தறிவு பாடல்களை பெரியார் பிஞ்சுகள் யாழிசை, யாழினி பாடினார்கள். ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை தாமோதரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், திவிக) நடத்தினார்.
பெரியார் பெருந்தொண்டர்கள் அய்யா திருமால், டெய்லர் சேகர் ஆகியோர் படங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து “திராவிடத்தை ஆதரிப்போம்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் துரை. காசிநாதன் (தலைமைக் கழகப் பேச்சாளர்), வே மணிவண்ணன் (பேரவை, பசுலூன் பகுத்தறிவாளர் கழகம்), சி.எம்.எஸ். ரமேஷ் (திராவிட கழக நகர செயலாளர்), பாலமுருகன் (ஒன்றிய தலைவர்), அசோகன் (ஒன்றிய இளைஞரணி திக.), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம். திருப்பூர்), சங்கீதா (திருப்பூர் மாவட்ட அமைப்பாளர். திவிக), மனோகரன் (திருச்சி திவிக மாவட்ட அமைப்பாளர்), புதுக்கோட்டை மாவட்ட தோழர்கள், கார்த்திகேயன் (மாவட்ட அமைப்பாளர்), ஆத்தூர் மகேந்திரன் (திவிக), அய்யா கோவிந்தராஜ் (முன்னாள் வனத்துறை அதிகாரி திவிக), குமரபட்டி வாசு, சிகரன் தங்கை ஆர்த்தி, வெங்கட், திருப்பூர் விஜயகுமார், அம்ஜத்கான் (திவிக,மேட்டூர்), இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மகாராஜா, பக்ரூதீன்(நகரத் தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), மக்கள் அதிகாரம் தோழர்கள், விசிக மதனகோபால் (மாவட்ட பொருளாளர்), சிபிஎம் சாஜகான் (சிபிஐ), ஆடு சக்திவேல் (வட்ட செயலாளர், பாலு புரட்சிகர இளைஞர் முன்னணி) ஆகியோர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர்கள் ஊ. ராம சாமி (திமுக.ஒன்றிய செயலாளர்), ஏ.பி சரவணன் (திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணப்பாறை) ஆகியோர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய் திருந்தனர். நடுபட்டி தினேஷ் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 18022021 இதழ்