ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு
பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர். பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார். அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச்...
