கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்
இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்குப் பலியான மனிதநேயன் ஃபாருக் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின், சிந்தனை அரங்கம் 19.03.2022 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்வை தலைமையேற்று வழிநடத்தினார்.
‘இஸ்லாத்தில் நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் இந்திய முற்போக்காளர்கள் கூட்டமைப்பு – ஜின்னா மாச்சு, ‘அறிவியலுக்கு முரணான கிருஸ்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கூடம் – நாத்திக வசந்தன், ‘இந்து மதமும் – பெண்களும்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் இரா. உமா, ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பீர் முகமது, முன்னாள் முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த உமர் – ஹிஜாப், இஸ்லாத்தில் பெண்களின் அவலங்களைப் பற்றியும் உரையாற்றினர்.
இறுதியாக ‘மானுடத்துக்கு மதம் தேவையா?’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நிகழ்விற்கு ஃபாருக் நண்பர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
இரவு உணவை ஃபாருக் நண்பர் அய்யப்பன் ஏற்பாடு செய்தார். நிகழ்வில், “குர்ஆனில் சில அய்யப்பாடுகள்” – லூசிஃபர் எழுதிய நூல், வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலினை வெளியிட, பாரூக்கின் இளமைக் கால நண்பர் ஐயப்பன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோருக்கு இந்த நூல் இலவசமாக வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 24032022 இதழ்