புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார்.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள் நிர்வாகிகள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய பணிகள், அடுத்து நம் முன் நிற்கும் சமூக கடமைகள் குறித்த செய்திகளை கூடியிருந்த தோழர்கள், மக்களிடையே எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்விற்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார்.
கழகப் பொறுப்பாளர்கள் சங்கீதா, தனபால், ஐயப்பன், மாதவன், மாணவர் கழக சந்தோஷ், பிரசாந்த் பரிமளராஜன் தனகோபால், மாரிமுத்து, முருகவேல், கீதா மணி, கார்த்திக், பெரியார் பிஞ்சு யாழிசை உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேட்டூரில் : 06.12.2021 திங்கள் காலை 10.00 மணியளவில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேட்டூர், மேட்டூர் சுள பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோவை : காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அம்பேத்கர் படத்திற்கு கழகத் தோழர் சுரேஷ் தலைமையில் மாலையிட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்து கொண்ட தோழர்கள் : மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், சுரேஷ், நேருதாசு, நிர்மல்குமார், வெங்கட், மாதவன்சங்கர், கிருஷ்ணன், இராஜாமணி, புரட்சித்தமிழன், ரத்தினபுரி சதீஷ், இயல், எழிலரசன். தோழர்கள் அனைவருக்கும் புரட்சித் தமிழன் தேநீர் வழங்கினார்.