அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் -லதா இணையரின் மூத்த மகள் தமிழ்செல்வி – சிறீராம்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்வு 9.11.2021 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி,  தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேராசிரியர் சரஸ்வதி, மாணவர் நகலகம் உரிமையாளர் சவுரிராசன், மணிமேகலை, பொள்ளாச்சி மா. உமாபதி, தடா ஓ. சுந்தரம், வருமான வரித் துறை முதன்மை ஆணையர், செல்வகணேஷ், இணை ஆணையர் பி. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினார்.

மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.50,000/-மும், குழுமூர் அனிதா அறக்கட்டளைக்கு ரூ.10,000/- அளிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 18112021 இதழ்

You may also like...