‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத நிலையில் அனிதா உயிர்ப் பலி தந்ததைத் தொடர்ந்து ‘நீட்’ இரத்து கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2017இல் நடந்தது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கைப் பதிவு செய்தது.

போராட்டம் – சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைப்படித்தான் நடந்தது; சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏதும் நிகழவில்லை என்று கழக சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். நீதிபதி சதீஸ்குமார், வழக்கறிஞர் வாதத்தை ஏற்று 12 தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்தார்.

பெரியார் முழக்கம் 03022022 இதழ்

You may also like...