‘அண்ணாவை பேசுவோம்; வாசிப்போம்’ – கழகம் நடத்திய கருத்தரங்கம்
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் நினைவு தின கருத்தரங்கம், ‘அண்ணாவை பேசுவோம், வாசிப்போம்’ என்ற தலைப்பில், 27.02.2021 சனிக்கிழமை, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை தலைமை அலுவலகத்தில், மாலை 6 மணியள வில் தொடங்கி நடைபெற்றது. கழகத்தின் தலைமைக் குழு உறுப் பினர் அன்பு தனசேகர் வரவேற்பு கூறி னார். அறிவுமதி தலைமை வகித்தார்.
‘திராவிடம் பேசிய சிறுகதைகள்’, ‘அண்ணாவின் ஆரிய மாயை’, ‘அண்ணா – திராவிட நாடு’ ஆகிய தலைப்புகளில் தேன்மொழி, மதிவதினி, சந்தோஷ் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கருத்துரையாற்றினர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அண்ணாவை ஏன் பேச வேண்டும், தற்போதைய பாஜக ஆட்சியில் பறிபோன உரிமைகள் மீட்க எப்படி அண்ணா தேவைப்படு கிறார், பார்ப்பனியம் அண்ணாவிடம் எப்படி தோற்றது’ போன்றவற்றை தெளிவாக விளக்கி சிறப்புரை யாற்றினார்.
கருத்துரையாற்றிய தோழர்களுக்கு, சரவணக்குமார் எழுதிய ‘தம்பிக்கு’ என்ற புத்தகத்தை, பேராசிரியர் சரஸ்வதி வழங்கினார். இறுதியாக தென்சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 04032021 இதழ்