தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 16062022 இதழ்

You may also like...