சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு
1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர். சிறைக்குள்ளேயே இரு தோழர்கள் மரணமடைந்தனர். விடுதலையாகி ஒரு மாதத்துக்குள் 18 பேர் சிறையின் மோசமான உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். அந்த நவம்பர் 26ஆம் நாளை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்கும் நாளாக பல்வேறு ஊர்களில் நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் : 26.11.2021 அன்று கள்ளக் குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட வரலாறுகளையும், தமிழ் நாட்டில் அந்தப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற வகையில் ஒரு நாள் பிரச்சாரம் நடைபெற்றது. காலை 10 மணியளவில் மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை அருகில் துவங்கிய பிரச்சாரம், பகல் 12 மணிக்கு – பகண்டை கூட்டு ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடை பெற்றது. மதிய உணவுக்குப் பிறகு மாலை 3 மணிக்கு சங்கராபுரம் பேரறிஞர் அண்ணா சிலை அருகிலும், மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகிலும் பிரச்சாரம் நடைபெற்றது. ஒரு நாள் பிரச்சாரத்தில் 2000 துண்டறிக்கைகள் தோழர்கள் மக்களிடத்தில் வழங்கினர்.
பிரச்சாரத்திற்கு மாவட்டக் கழக அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை வகித்தார். தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் கருத்துரை வழங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.நாகராஜ், அறிவியல் மன்ற அமைப்பாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம் உள்ளிட்ட முப்பது தோழர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். கள்ளக் குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டத் தலைவர் மதி, கல்லை ஆசைத்தம்பி, சங்கர், வெற்றிவேல், திருமால் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். மா.குமார் நன்றி கூறினார். பொது மக்கள் ஆர்வத்துடன் துண்டறிக்கைகளை வாங்கிப் படித்ததுடன், இந்தப் போராட்டம் குறித்த கூடுதல் தகவல்களையும் கேட்டறிந்தனர்.
மேட்டூரில் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டூர் நகரம் சார்பாக, ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகளை எரித்து சிறை சென்று உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தெருமுனை கூட்டமாக மேட்டூர் சின்ன பார்க் திடலில் 26.11.2021 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்தின் முதல் நிகழ்வாக பறை முழக்கம், அதனை தொடர்ந்து ஜாதி ஒழிப்புப் பாடல்களும் பாடப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்கக் கூட்டம் சேலம் மேற்கு மாவட்டச் செய லாளர் சி.கோவிந்தராஜ் தலைமையில் தொடங்கியது.
கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் நகர செயலாளர் அப்துல் கபூர், மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார்,
திராவிடப் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து தோழர் தேன்மொழி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி கூற தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக நகர செயலாளர் பிரதாப் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் மாலை 07.00 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.
கோவையில் : ஜாதி ஒழிப்புக்காக 1957 நவம்பர் 26 அன்று சட்டத்தை எரித்து சிறை சென்று களப்பலியான போராளிகளுக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர் வெங்கட் தலைமையில், இரஞ்சித் உறுதிமொழி வாசிக்க அனைத்து தோழர்களும் உறுதிமொழி ஏற்றனர். மாதவன் சங்கர் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூறினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெகதீஷ் – கவிதா தேநீர் வழங்கினர்.
கலந்து கொண்ட தோழர்கள் : வெங்கட், இரஞ்சித், மாதவன் சங்கர், நிர்மல், நேருதாசு, கிருஷ்ணன், லோகு, சதீஷ், இராஜாமணி, மணிராஜ், அமிலா, கவிதா, புரட்சி தமிழன், இராமச்சந்திரன், எழிலரசன், ஜெகதீஷ், இராமகிருஷ்ணன், பிரகாஷ்.
திருப்பூரில் : நவம்பர் 26 1957-இல் தலைவர் தந்தை பெரியாரின் ஆணையை நேற்று தமிழ்நாடெங்கும் அரசியல் சட்ட பிரிவுகளை கொளுத்திய கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
26.11.2021 அன்று, திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் மாநகரம் கழகம் சார்பாக ஆத்துப் பாளையம் திமுக அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
நிகழ்வில், கழகப் பிரச்சாரச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் சந்தோஷ், தமிழ்நாடு மாணவர் கழகம் முகில்ராசு, மாவட்டத் தலைவர் தனபால், மாநகரத் தலைவர் முத்து, மாநகர் அமைப்பாளர் பரந்தாமன், மதன், அய்யப்பன், மாரிமுத்து கருப்பையா, திமுக சார்பில் – ரத்தினசாமி, திருப்பூர் மாவட்ட பாத்திர தொழிலாளர் சங்கம், சாமிநாதன் 10 வது வட்டக் கழகம் பொறுப்பாளர், ஆத்துப்பாளையம்- மணிமாறன், அய்யப்பன் திமுக ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மணிகண்டன் திமுக ஆட்டோ ஓட்டுநர் சங்கம், ஆறுச்சாமி திமுக திருப்பூர் மாநகரம், பார்த்திபன் திமுக பகுதி இளை ஞரணி அமைப்பாளர், பூபதி ஆத்துப் பாளையம் திராவிட முன்னேற்றக் கழகம், சரவணனன், ஆத்துப் பாளையம். பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
சென்னையில் : ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை, பெரியாரின் கருஞ்சட்டை தோழர்கள் எரித்து சிறை சென்ற நாள். 1957 நவம்பர் 26 ஆம் நாள்.
சட்ட எரிப்பு நாளை நினைவு கூறும் வகையில், இன்று காலை 10 மணியளவில், மந்தைவெளி பெரியார் படிப்பகம் அருகில், மாவட்ட துணை செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. சட்ட எரிப்பு போராளிகளை நினைவு கூறும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சுகுமார் சட்ட எரிப்பு நாள் உறுதிமொழியை கூற தோழர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்திலும், மமுழக்கம் எழுப்பப்பட்டு ஜாதி ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்வில், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மயிலை சுகுமார், இராவணன், மனோகர், சிவா உள்ளிட்ட தோழர்களுடன் சென்னை கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 02122021 இதழ்