மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது.

புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ச.தனசேகரன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 16062022 இதழ்

You may also like...