ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்
“ராஜபக்சே தனது அரசை ரவுடிகளின் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். (Rogue Institution) அப்படி மாற்றிக் கொண்ட சித்திரவதை, ஆள் கடத்தல் படுகொலைகளை அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் செய்து வருகிறார்” – இப்படி அய்.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதியே குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் வி.சுரேஷ் மற்றும் டி.கே. நாகசாய்யா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர். (மார்ச் 16, 2012) எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிராக கண்டன தீர்மானம் வருவதை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய அரசு எடுத்துள்ள நிலையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனித உரிமை மீறல் என்பதற்கான விளக்கம் என்ன? ஏதேனும் ஒருவர் அக்குற்றத்தை செய்கிறார்; அவர் இராணுவத்தினராக இருக்கலாம்; போலீசாக இருக்கலாம். மனித உரிமை மீறலுக்கு உள்ளாகிறவர், பொது மக்கள்; ஆயுதமற்ற நிராயுதபாணிகள். இவை எல்லாமே எப்படி நிகழ்கின்றன? சூன்யத்திலா? ஏதேனும் ஒரு...
