பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்
திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....
