வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

8.9.2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் விரிஞ்சிபுரம் வி.எஸ்.பி மகாலில் திராவிட வேர்கள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு எழுத்தாளர் டான் அசோக் தலைமை தாங்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, கல்வியாளர் பாலா கருத்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கருஞ்சட்டை கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி தோழர்கள் திராவிட கருத்தியலில்  ஆர்வம் கொண்ட இளைஞர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தின் வேலூர் மாவட்ட அமைப்பாளர்கள் நெமிலி திலீபன், குடியாத்தம் சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றார்கள்.

பெரியார் முழக்கம் 13092018 இதழ்

You may also like...