‘மாவீரன் ராஜா’வே எங்கே பதுங்கினாய்?

காவல்துறை அதிகாரிகளை மிரட்டி இட்லர் பாணியில் பேசியதோடு, “உயர்நீதிமன்றம் என்ன மயிரா?” என்று வீர கர்ஜனை செய்த “மாவீரன்” ராஜா, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. திருமயம் காவல்துறை, பிணையில் வெளி வர முடியாத எட்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, “மாவீரன்” ராஜாவைப் பிடிக்க தனிப்படைகளை நியமித்திருக்கிறது. ‘அப்படி எல்லாம் நான் பேசவே இல்லை’ என்று பல்டி அடித்த பார்ப்பன ராஜா, இப்போது தனது அலைபேசியை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டாராம்.

‘முண்டா தட்டும் வீராதி வீரன்’ எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். காவல்துறை போலீஸ் மோப்ப நாயைப் பயன்படுத்தியாவது இந்த ‘சங்கியை’த் தேடிப் பிடித்துக் கைது செய்யவேண்டும் என்று தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பெரியார் முழக்கம் 20092018 இதழ்

You may also like...