கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை
திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களைப் பற்றியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும்,
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தோழர்.கொளத்தூர்மணி அவர்களைப் பற்றி, தவறான,
உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனை தோழர்.கொளத்தூர்மணி தான் காட்டிக் கொடுத்ததாக அவதூறாகக் கூறியுள்ளார்..
மேலும், அந்த வீடியோவில், வேலூர் சிறையிலிருந்து 44 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூர்மணியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, தன் கையில் துப்பாக்கி இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார்..
தனது பணிக்காலத்தில் இது போன்று பேசாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அந்த அதிகாரி இது போன்று பேசவேண்டிய அவசியம், மர்மம் என்ன என்பதையும் அறிய வேண்டி உள்ளது..
ராஜீவ் காந்தி கொலைவழக்கிலுள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் விலகாத சூழலில் இது போன்று பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது..
சட்டவல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மீது, வழக்கு தொடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்..
– ப.இரத்தினசாமி
அமைப்புச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்