மலேசியாவில் பெரியார் நூல்கள் வெளியீடு
மலேசியாவில் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிலாங்கூர் மாநிலம் முன்னாள் நகராண்மைக் கழகத்தில் செப்.17 அன்று கொண்டாடப்பட்டது. டாக்டர் சி. தர்மலிங்கம் (சிலாங்கூர் மலேசிய தி.க. தலைவர் – ம.தி.க.) வரவேற்புரையில் த. பரமசிவம் (தலைவர், ம.தி.க. சிலாங்கூர் மாநிலம்) தலைமையில், ம.தி.க. பொறுப்பாளர்கள் எம். காந்தராஜ், பெரு. அ. தமிழ்மணி (தமிழர் தன்மான இயக்கத் தலைவர்), குணராஜ் ஜார்ஜ் (சட்டமன்ற உறுப்பினர் செந்தோசா), கணபதி ராவ் (சட்டமன்ற உறுப்பினர், சிலாங்கூர்) ஆகியோர் உரை யாற்றினர். விழாவில் கே.எம். பாலசுப்பிரமணியம் எழுதிய ‘பெரியார் ஈ.வெ. இராமசாமி’ எனும் ஆங்கில நூலும், நாரா. நாச்சியப்பன் எழுதிய ‘பெரியார் வரலாறு’ நூலும் வெளியிடப்பட்டன. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியா கோ நூல்களை வெளியிட்டார். ‘தோழர் பெரியார்’ நாடகம் காணொளி வழியாக ஒளிபரப்பப்பட்டது. இதே இடத்தில் 2017 ஜூன் மாதம் விடுதலை இராசேந்திரன் அ. மார்க்ஸ் பேசிய கூட்டத்தில் பெரியார் எதிர்ப்பாளர்கள் கலவரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 20092018 இதழ்