கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார்.

முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கடந்த 23.09.2018 அன்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பிடித்த வி.ஏ.டி அணிக்கு 5,000 ரூபாய் காசோலையும் கோப்பையும் அதியமான் வழங்கினார். முதல் இடம் பிடித்த லகசி அணிக்கு 8000/- ரூபாய் காசோலையும் வெற்றி கோப்பையையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டிற்கு, மயிலைப் பகுதி கழக இளைஞர்கள் 100 சந்தாக்களுக்கான தொகை ரூ. 20,000/- கழகத் தலைவரிடம் வழங்கினர். இந்த பொதுக் கூட்டத் திற்காக கடந்த 20 நாட்க ளாக உழைத்த மயிலாப்பூர் பகுதி இளைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டன. இறுதியாக உதய குமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.  இரவு அனை வருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 11102018 இதழ்

You may also like...