மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி நடத்தும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 23.09.2018 அன்று காலை 8.00மணிக்கு குருபுரம் விளையாட்டு திடலில் தொடங்கப்பட்டது. போட்டியை காங்கிரசை சார்ந்த ஐடீஊ பாலு தொடங்கி வைத்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

மாலை 6.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகை தந்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இறுதி சுற்றுக்கு தகுதியான அணிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து இறுதிச் சுற்றை தொடங்கி வைத்தார்.

பெரியார் முழக்கம் 27092018 இதழ்

You may also like...