ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்
பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது.
அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம் கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது.
கீழ்வானி பகுதியில் வீரா கார்த்திக், இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் சதுமுகை பழனிச்சாமி கழகக் கொடி யினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பயணம் ஜம்பைப் பகுதிக்குச் சென்று அடைந்தது. அங்கு கழகக் கொடியினை இராம இளங்கோவன் ஏற்றி வைத்தார். இராம இளங்கோவன், வேணு கோபால் பயணத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினர். தோழர்கள் மதிய உணவுக்கு வேணுகோபால் இல்லம் சென்றனர். மதிய உணவுக்குப் பின் பயணக்குழு பவானி பகுதிக்கு வந்தது. பவானி பழைய பேருந்து நிலையம் மற்றும் அந்தியூர் பிரிவு ஆகிய பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடி கம்பத்தில் கழகக் கொடி ஏற்றிய பின் அங்கு நடந்த பரப்புரைப் பயணத்தில் வேணு கோபால், இரமேசு, இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினர். பயணக்குழு பவானியை அடுத்து குருவரெட்டியூர் சென்று அடைந்தது. அங்கு பரப்புரைப் பயணம் பொதுக் கூட்டமாக நடை பெற்றது. பொதுக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக் குழுவின் பறையாட்டம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடை பெற்ற பொதுக் கூட்டம் நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி தலைமையேற்க, அம்மாபேட்டை ஒன்றியப் பொறுப்பாளர் வேல்முருகன் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்டச் செயலாளர் வேணுகோபால், நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர் இரேமசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயண நோக்கத்தை விளக்கி உரை யாற்றினார்கள். திலீபன் அனை வருக்கும் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. அன்றைய பரப்புரை பயணம் அத்துடன் நிறைவு பெற்றது.
தோழர்களுக்கான மதிய உணவை சுந்தரம், வேணுகோபால் ஆகியோரும், இரவு உணவை குருவரெட்டியூர் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். பயணத்தில் மாவட்ட கழகத் தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 11102018 இதழ்