கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது.

முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு 50 ஆயிரம் உதவி வழங்கி சிறப்பித்த இனமான நடிகர் சத்தியராசு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.வா.க. தலைவர் தி.வேல்முருகன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், குறிப்பாக சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், இரா. உமாபதி, மயிலை சுகுமார் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் 12ஆம் வகுப்பில் 1100 மதிப்பெண் பெற்ற திவிக-வைச் சேர்ந்த த.இளவேனில், பா.வெண்ணிலா, வினிதா, யமுனா மற்றும் திக-வைச் சேர்ந்த வெ.தா.தமிழ்ச்செல்வி, அன்புமதி மற்றும் தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்த மாணவி ரீதா ராஜன் ஆகிய மாணவர்களுக்கு இனமான நடிகர் சத்தியராசாவால் பாராட்டு கேடயமும் கல்வி உதவியும் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் சுமார் 600 மாணவர்களுக்கு உதவியும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

பெரியார் முழக்கம் 11102018 இதழ்

You may also like...