கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு. பெரியார் வெங்கட் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்டச் செயலாளர் க. இராமர், அமைப்பாளர் சி.சாமிதுரை, புதுச்சேரி தீனா, அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் இளையரசன், துணைச் செயலாளர் குப்புசாமி, கடலூர் பாரதிதாசன், செஞ்சி பெரியார் சாக்ரடீசு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். வ. பிரபு நன்றியுரையாற்றினார். அ. பாரதிதாசன், இரா. கார்மேகம், கொ. ஏழுமலை, ஊ. திலீப்குமார், வினோத், மா. கிருஷ்ணன், தென்னரசு ஆகியோர் விழா குழுவினராக செயல்பட்டனர்.

குறிப்பு : எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த ஊரைச் சார்ந்த இளைஞர்கள் கூட்டம் நடைபெற விடாமல் தடுத்து நிறுத்திய அந்த தோழர்களே இந்தக் கூட்டத்தை தலைமையேற்ற நடத்தினர். நாற்பது இடங்களில் சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 11102018 இதழ்

You may also like...