திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 17.09.18 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. எழுத்தாளர் வி.எம்.எஸ் சுபகுணரஜன், பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர் இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மருதம் இரவி கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கழகத் தலைவரை சால்வை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க. கட்சித் தோழர்கள், அய்.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன், செஞ்சி பெரியார் சாக்ரட்டீஸ், சென்னை தம்பி மண்டேலா, நடராசன், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி பரப்புரை செயலாளர் விஜி, இளங்கோவன், பெரியார் கணேசன், அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 27092018 இதழ்