Category: திவிக

மாநாட்டு மண்டபத்தை  தலைவர் பார்வையிட்டார்

மாநாட்டு மண்டபத்தை தலைவர் பார்வையிட்டார்

சேலம் மாநாடு நடக்கும் ‘சந்திர மகால்’ மண்டபத்தை கழகத் தலைவர், மாவட்டக் கழகத் தோழர்களுடன் சென்று பார்வையிட்டார். (பிப்.17, 2023) பெரியார் முழக்கம் 23022023 இதழ்  

சிங்காரவேலர் சிலைக்கு  கழக சார்பில் மாலை

சிங்காரவேலர் சிலைக்கு கழக சார்பில் மாலை

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 164ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிங்காரவேலர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட கழகச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண், கிஷோர், மயிலைப் பகுதி கழகத் தலைவர் இராவணன், மனோகர், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, மே 17 இயக்கம் முகிலன், திராவிடர் கழகம் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23022023 இதழ்

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார், அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் . தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த...

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) கல்புர்கி, கவுரி லங்கேசு இவர்களைக் கொன்ற துப்பாக்கியில் ஒரே ஒரு துப்பாக்கி. அது ஒரே வகை தோட்டா என்று இப்போது அறிக்கையிலே வெளி வந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்தால் அனைவரும் சொல்கிறார்கள் அமைப்பு ஒண்ணு இருக்குதுன்றான் என்னடா அமைப்பு? அப்படீன்னு கேட்டா, சனாதன, சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று. அவர்கள் சாஸ்திர தர்மம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தைப் படித்ததற்குப் பிறகு படித்தவன் யாரெல்லாம் இந்த சனாதன் தர்மத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை தீர்த்துக் கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். ஏதோ சுதந்திரத்திற்குப் பின்பு தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும். சனாதனத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை. இந்தியர்களை மட்டுமல்ல பிரிட்டிஷார் ...

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

  திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர். ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது....

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

ஊடகம் மற்றும் சமூக அறிவியல் மையம், மூங்கில்பாடி,சேலம் மற்றும் சேலம்  ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை நடத்திய தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு நடந்தது. “திரைப் படங்களில் திராவிடக் கதையாடல்கள்”: “பராசக்தி திரைப்படம்” – ‘வாசிப்பு மற்றும் மீள் வாசிப்பு’ எனும் தலைப்பில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் 10.02.2023 வெள்ளி காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று “பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

பெரியாரியலாளர் சேத்துப் பட்டு க. இராஜேந்திரன் – அலமேலு மணிவிழா பிப்.22ஆம் தேதி அயனாவரம் ‘ஸ்ரீசக்தி பார்ட்டி ஹாலில்’ ஆனூர் ஜெகதீசன் (தலைவர் த.பெ.தி.க.) தலைமையில் நிகழவிருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங் குடி ஆணைய துணைத் தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர் வழக்கறிஞர் குமாரதேவன், அன்பு தனசேகர் (தி.வி.க.) சிறப்புரையாற்றுகிறார்கள். மணிவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ.2000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

¨        காந்தியார் கொலை வரலாறு மறைக்கப் படுகிறது. ¨        காந்தியாரிடம் பெரியார் இயக்கத்துக்கு முரண் உண்டு. இரட்டை வாக்குரிமை ஓர் உதாரணம். ¨        அம்பேத்கர் ஒன்றிய அரசுப் பதவிகளில் ஆதிராவிடர் இடஒதுக்கீட்டை 1943லேயே பெற்றுத் தந்தவர் பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர்...

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

மதுரையில் காதலர் தினம் ‘இந்து முன்னணி’க்கு கழகம் பதிலடி

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ராஜாஜி பூங்காவில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தியறிந்து, அதே பூங்காவில் மதுரை திவிக சார்பில் காதலர் தின வாழ்த்து தெரிவித்து காதலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. மேலும் “ஜாதி மறுத்து காதல் செய்வோம் – ஜாதி மறுத்து இணையேற்போம்” – ஜாதி மறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு “ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு வழங்கிடுக” என்று தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் மா.பா. மணிஅமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, புலிப்பட்டி கருப்பையா மற்றும் விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலை கழகத் தோழர் அஸ்வின் குமார் – ஆனந்தி ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 03.02.2023 வெள்ளி அன்று சென்னை தேனாம்பேட்டை, டாக்டர் கிரியப்பா சாலை, சமூக நலக்கூடத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.  விழாவிற்கு தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். இணையேற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.  ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.  கழக ஏட்டுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09022023 இதழ்  

நன்கொடை

நன்கொடை

குமாரபாளையம் தமிழன் இன்ஜினியரிங் லேத் தோழர் மாது ராஜி சரசுவின் மகன் திலகன்-சந்தியா தம்பதியருக்கு 29.1.2023 பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்வான தருணத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை ரூ.1000/- காவலாண்டி ஊர் சார்பாக வழங்கி உள்ளார். பெரியார் முழக்கம் 09022023 இதழ்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 26.1.23 அன்று திருப்பூர் மங்கலம் சாலை கே ஆர் சி மஹாலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அறிமுக உரையாற்றினார். கழக நிர்வாகிகள் உடுமலை மற்றும் பல்லடம் பொறுப்பாளர்கள், மாநகர பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா வசூல் மற்றும் பரப்புரைக்கான பல்வேறு ஆலோசனைகளை பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மகிழவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நிறைவாக பேசிய கழகத் தலைவர், கழகம் கொள்ளவிருக்கிற அடுத்தகட்ட செயல்பாடுகள்,...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

உடல் மற்றும் கண்கள் கொடை

உடல் மற்றும் கண்கள் கொடை

திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய...

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 02.02.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் திருமலை கிரி கோவிலில் அனைத்து தரப்பு இந்து மக்களும் வழிபட ஆலய நுழைவை தமிழ் நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சத்திவேல் தலைமை தாங்கினர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்தி வேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.  தோழர்கள் தங்களது உரையில் “கிராமப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் ஜாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றை தமிழ்நாடு அரசு கண்கானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதேபோல அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் வழிபட தமிழ்நாடு...

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து தமிழ்நாட்டில் காவியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று காந்தி படுகொலை கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதி ஏற்றனர். சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 6.2.2023 மாலை மந்தைவெளி இரயில் நிலையிம் அருகே காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளோடு எழுச்சியுடன் தொடங்கியது. காந்தியாரின் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வடிவத்தில் தங்களுக்கு முரண்பாடு உண்டு என்றும், பகத்சிங் நிலைப்பாட்டையே தங்களது அமைப்பு அங்கீகரிப்பதாகவும் கூறிய பாடகர் கோவன், காந்தி படுகொலையை பார்ப்பன சங்கிகள் திட்டமிட்டு நடத்தியதைக் கண்டிப்பதிலும், அது நம் அனைவருக்குமான வரலாறு தரும் எச்சரிக்கை என்பதிலும் நாம் இந்த மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தன்னிலை விளக்கத்தோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். காந்தி படுகொலைக்குப் பின் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டக் கோரினார் பெரியார். ஆனால் காந்தி பிறந்த...

திருப்பூர் மாஸ்கோ நகரில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.  விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி,...

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது. உரை :      ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ. பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) வழக்கறிஞர் திருமூர்த்தி கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து நினைவிடம் வட சென்னை மூல கொத்தளம் பகுதியில் உள்ளது. அதேபோல ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமார் நினைவிடம் சென்னை கொளத்தூரில் உள்ளது. கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மயிலை சுகுமார், இராவணன், மனோகரன், பிரவீன், உதயகுமார், ரவி பாரதி, சிவா, கனி, நரேஷ் உள்ளிட்ட தோழர்கள் முறையே ஜன. 25 மற்றும் 30ஆம் தேதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார்....

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான கழக வார...

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காயாம்பட்டியில் ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கண்ணன் எனும் இளைஞர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது – காயாம்பட்டியை சார்ந்த ஆதிக்க ஜாதி வெறியர்கள் 7 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி “நீயெல்லாம் வண்டில வேகமா போறியா” என சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  மேலும் அவரை நிர்வாணப்படுத்தி அவரது மனைவி மீதும் பாலியல் சீண்டல் செய்திருக்கின்றனர். இத் தகவலை அறிந்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் மக்களை சந்தித்து உண்மை தகவலை அறிந்து பாதிக்கப்பட்ட சமூக மக்கள் 26 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடந்து 27-1-23 அன்று தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும்...

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்துக்குள் பெரியார் மார்பளவு சிலை ஒன்றை நிறுவி, அதன் திறப்பு விழாவுக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்திருந்தார். ஜன. 29 அன்று இல்லத் திறப்புக்கு முன்பே சிலையை அதிகாரிகள் அகற்றி விட்டனர். காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளது; அகற்றுமாறு கோரினர். வீட்டின் வளாகத்துக்குள் சொந்த இடத்தில் வைத்துள்ள சிலையை ஏன் அகற்ற வேண்டும்? எதற்காக அனுமதி? என்று கேட்டு நீதிமன்றத் தீர்ப்புகளையும் கழகத் தோழர் எடுத்துக் காட்டினார். அதிகாரிகள் அது பற்றி கேட்காமலேயே சிலையை அகற்றி மூட்டையில் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பெரியார் சிலை அகற்றப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரச்சினை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கோட்டையூரில் கழகத் தோழர் இல்லம் அருகே தான் பா.ஜ.க.வின் எச். ராஜா பண்ணை இல்லம் இருக்கிறது....

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்வு, மக்கள் கலை விழாவாக ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் (திமுக) முனைவர் ஏ. ரியா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர். பறையிசை, சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள்,...

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களின் இணையர் வசந்தி (வயது 59) 20.01.2023 அன்று காலை 10 மணி அளவில் உடல்நலமின்றி இயற்கை எய்தினார். முடிவு செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கழகப் பொருளாளர் துரைசாமி,  தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கு. இராமகிருட்டிணன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கு. இராமகிருட்டிணனின் நீண்ட கால பெரியார் பணிக்கு துணை நின்ற அம்மையாரது இறுதி வணக்க ஊர்வலம் 21.01.2023 காலை 10 மணியளவில் இராமகிருட்டிணன் இல்லத்தில் இருந்து அருகில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்திலும் கழகத் தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்....

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சென்னை 46ஆவது புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை சார்பில் நூல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “மரண தண்டனை ஒழிப்போம்” உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்கள் சிறைவாசிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தோழர்கள் உதயகுமார், பிரவீன், வழக்கறிஞர் அன்பரசன், புகழ் பொன் வளவன் அருண், மகிழவன், விஷ்ணு, பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26012023 இதழ்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

6.1.2023 மாலை 4 மணிக்கு சங்கராபுரம் வாசவி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர் க. இராமர்,  மாவட்ட அமைப்பாளர் கி. சாமிதுரை, சங்கை ஒன்றிய செயலாளர் அன்பு ரவி, ந. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், கழகம் ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆகியவைகளைப் பற்றித் தோழர்கள் கருத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், க.ராமர் மு.நாகராஜ், கி.சாமிதுரை, மா.குமார், அன்பு ரவி, கார்மேகம், பெரியார் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு உதாரணங்களைக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் இப்போது...

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

2014ஆம் ஆண்டு அறிவுக்கு ஒவ்வாத ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆபாசங்களை விளக்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் துண்டறிக்கை வழங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தனர். இந்து முன்னணி கும்பல் சிலர் துண்டறிக்கை தரக்கூடாது என ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டு மோதலில் முடிந்த நிலையில் தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல்துறை கைது செய்தது. இந்து முன்னணியினர் சிலரையும் காவல்துறை கைது செய்தனர்.  கழகத் தோழர்கள் 15 நாள் சிறைக்கு பின் பிணையில் வெளிவந்தனர். இந்த வழக்கு 8 வருடமாக நடந்து வந்தது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்காக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியன் வழக்கறிஞராக தொடர்ந்து வாதாடினார். இந்நிலையில்  11.1.2023 இன்று திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்குக்காக தொகை ஏதும் பெறாமல்...

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

நான் கருஞ்சட்டைக்காரன்’ பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் 13.1.2013 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணித் தலைவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ நூலை வெளியிட்டார். அவர் நிகழ்த்திய உரை: “நான் இங்கு வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளேன். ஆனால், எனக்கு கருப்பு சட்டை அணிவது தான் மிகவும் பிடித்த ஒன்று. நான் நிறத்திற்காகக் கூறவில்லை; கருத்திற்காக கூறுகிறேன். அதை உணர்ந்து தான் அன்போடு என்னை உரிமையோடு இந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் அழைத்திருந் தார்கள். நானும் அதே எண்ணத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடு வதற்காக இங்கு வந்திருக்கிறேன்....

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது) தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க...

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணமடைந்து விட்டார் என்ற செய்தி தாங்க முடியாத ஒரு துயரமாகும். உண்மையிலேயே இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு தேசிய இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்தும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், இப்போதும் தன்னை ஒரு பெரியாரியவாதியாக, பகுத்தறிவாதியாக, பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவராகப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோலத் தான் தன்னுடைய மகன் திருமகன் ஈவெரா அவர்களையும் வளர்த்தார். திருமகன் ஈவெரா அவர்களும் தலைச்சிறந்த ஒரு பெரியாரியவாதியாகவே வாழ்ந்தார்; பகுத்தறிவுவாதியாகவேத் திகழ்ந்தார். சென்னையில் திருமகன் ஈவெரா திருமணம் புரட்சிகரமாக நடந்தது. பதிவாளரை நேரில் அழைத்து அதில் மணமக்கள் கையொப்பம் பெற்று சில நிமிடங்களில் மணவிழா புரோகித மறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த இழப்பு உண்மையிலே தாங்கிக்...

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழகத்தின் வழக்குகளுக்காக தொடர்ந்து வாதாடி வரும் வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா முடிவெய்தினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கழகத்தின் வழக்குகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வரும் திருமூர்த்தி அவர்களின் தந்தை கோ.இராமையா (77), 22.12.2022 அன்று கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தில் முடிவுற்றார். இராமைய்யாவின் இறுதி ஊர்வலம் 23.12.2022 அன்று சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உடன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், காவை ஈஸ்வரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களுக்கு கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது. இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன்  வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ்  நன்றி கூறினார்.   பெரியார்...

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

2023ஆம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டி தயாராக உள்ளது.  சனாதன எதிர்ப்பாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் படங்களுடன் அழகிய வடிவமைப்பில் உள்ள நாட்காட்டி ஒன்றின் விலை ரூ.50/-  (ரூபாய் அய்ம்பது மட்டும்). முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி அனுப்ப இயலும். நாட்காட்டி தேவைப்படுவோர் தொடர்புக்கு : தபசி குமரன் (99417 59641) தலைமை நிலையச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது. 05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம் 05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி) 06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி  மாவட்டம் 06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்) 07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம் 07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு) 08.01.2023 காலை 10.00 மணி –  ஈரோடு வடக்கு மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.   பெரியார் முழக்கம் 22122022 இதழ்

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-12-22 அன்று மாலை 4.30  மணியளவில்  கழக மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம்,  காவை. ஈஸ்வரன், ந. அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கழகம் விழுப்புரம் மாவட்ட அளவில் முன்னெடுக்க வேண்டிய  வேலைத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி பிரச்சனைகள், தலித் மக்கள் சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்வதில்  பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  துணை நிற்க வேண்டும் என்றும் இன்றைய அரசியல் சூழல், கழக வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’...

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

கழகத் தோழர் சைனி – அபிலாஷ் ஆகியோரின் இணையேற்பு விழா 14.12.2022 அன்று காலை 12 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக நிமிர்வு குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கழகச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தோழர்கள் புரட்சித் தமிழன், மாதவன் சங்கர், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சபரிகிரி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருட்டிணன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியை சிவராசு தொகுத்து வழங்கினார்.. கழகத் தோழர்கள் சார்பாக மணமக்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. தோழர்கள் அய்யப்பன், துளசி, ஆனந்த், விவேக், ரேணுகா, மணிகண்டன், ராஜபாளையம் மு.ராம்குமார் ஆகியோர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

2018ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என அவர் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். அச்சமயம் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடம் கல்வீசி தாக்கப்பட்டது. முன் விளக்குகள் உடைக்கப்பட்டன அங்கு இருந்த ஜெயேந்திரன் பதாகை கிழித்து எறியப்பட்டது. எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக கழகத் தோழர்கள் கோ. இராஜேந்திரன், த. மனோஜ்குமார் மற்றும் பொ. கிருஷ்ணன் ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியாகக் கூறி 21.03.2018 அன்று அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோழர்களைக் கைது செய்தனர். 2018இல் இருந்து 4 ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில் 02.12.22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.கழகத் தோழர்கள் அவ்வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் சேலம் பெரியார் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர். இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபனுக்கும்...

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் அய்ந்தாண்டு சந்தா 50 ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் அய்ந்தாண்டு சந்தா 50 ஒப்படைப்பு

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் 75ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தின் சார்பில் 100 அய்ந்தாண்டு புரட்சி பெரியார் முழக்க சந்தா தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் முதல் தவணையாக 50 புரட்சி பெரியார் முழக்கத்திற்கான 5 ஆண்டு சந்தா தொகை ரூ.75000 – த்தை கழகத் தலைவர் அவர்களிடம் நவம்பர் 26 ஆம் தேதி, ஜலகண்டாபுரம், சட்ட எரிப்பு நாள் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08122022 இதழ்  

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாநகர மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.12.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா. இராமச்சந்திரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: பெரியார் முழக்கம் சந்தா சேர்த்து டிசம்பர் இறுதிக்குள் தலைவரிடம் ஒப்படைப்பது. டிசம்பர் 6 / டிசம்பர் 24இல் அம்பேத்கர்/பெரியார் நினைவு நாட்களில் வீரவணக்கம் செலுத்துவது. கோவையில் கழகத் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது கோவை மாநகரப் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. கோவை மாநகர. தற்காலிக அமைப்பாளராக நா.வே.நிர்மல் குமார் நியமிக்கப்படுகிறார். கோவை மாநகரில் தோழமை இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் மாநகரத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்து கொள்வதாக இருந்தால் அமைப்பாளரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றே கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது. முதற்கட்டப் பயணம்: 16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம் 16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம். 17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம் (இரவு தங்கல் வேலூர் மாவட்டம்) 18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம் 18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம் இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்: 26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம் 26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம் 26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம் (இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் ) 27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம் 27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம் (இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம்...

ஈரோடு மாநகராட்சியில் யாக சாலைக் கூடமா? அகற்றக் கோரி கழகம் ஆர்ப்பாட்டம்: கைது

ஈரோடு மாநகராட்சியில் யாக சாலைக் கூடமா? அகற்றக் கோரி கழகம் ஆர்ப்பாட்டம்: கைது

ஈரோட்டில் சட்டவிரோத வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) அகற்றும் போராட்டம் ஈரோடு மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  01.12.22 வியாழன் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான அரசு வளாகத்தினுள் சட்ட விரோதமாகவும், இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறும் மதசார்பற்றத் தன்மைக்கு எதிராகவும், தமிழ்நாட்டு அரசின் ஆணைகளை நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைத்து அங்கு மத விழா நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த சட்ட விரோத யாகசாலையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  மனு அளித்த பின்பும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத...

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (ளுஊ, ளுகூ, ஆக்ஷஏ, டீஊ) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த  சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும்,  2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்....

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

தோழர்கள் திவ்யா – மதன் வாழ்க்கை இணைப்பு விழா  20.11.2022, ஞாயிறு காலை 11.00 மணியளவில் திருப்பூர், திருமுருகன்பூண்டி,டே மூன் பார்டி ஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ஆக நடைபெற்ற இத்த திருமண விழாவின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை யாழினி யாழ் இசை கோவை இசைமதி ஆகியோர் பாடினார்கள். ஆத்துப்பாளையம் பகுதி கழகத் தோழர் பரந்தாமன்  வரவேற்புரை யாற்றினார்கள். அடுத்து கழகத் தலைவர் தலைமையில் இணையர்கள்  இல்வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மணமகனின் நண்பர் மற்றும் கழகத்தின் மாநில பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தோழர்களும் பேசினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்தோஷ், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட...

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில், அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களை கருவரைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிராக பார்ப்பன அர்ச்சகரின் மகன் தொடர்ந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை கோரியும், சிம்சன் பெரியார் சிலை அருகில், 23.11.2022 மாலை 3:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேடியளித்த மாவட்ட செயலாளர் இரா.உமாபதி கூறுகையில், “பெரியாரின் நெஞ்சில் தந்தை முள்ளான, அனைத்து  ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு பணி நியமனத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது 2000 ஆண்டு கருவரைத் தீண்டாமையை உடைத்தது. இருந்தாலும், சில இடங்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி அர்ச்சர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பார்ப்பன அர்ச்சகரின் மகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கே நியாமானது இல்லை. நாளை...