கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார்.

இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

You may also like...