சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர்.

இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான் உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

You may also like...