மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : ஜூலை 23- ஆம் தேதியன்று கொளத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்கத் தவறிய ஆளும் பாஜக மற்றும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் பன்னீர்செல்வம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, கொளத்தூர் வி.சி.க மாணவரணி ஜீவா, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வி.சி.க. நகர து.செயலாளர் பழனி நன்றி கூறினார்.

You may also like...