நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது.

டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை நன்றி கூறினார்.

நங்கவள்ளி பகுதி அருள்குமார், குமார், பேரறிவாளன், தமிழருவி, நிலவன், தமிழச்செல்வி, வனவாசி பகுதி பன்னீர்செல்வம், தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நாகராஜ், மேட்டூர் பகுதி முத்துராஜ், வெள்ளார் பகுதி சிவ சண்முகம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்தனர்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

You may also like...