சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…
தோழர்களுக்கு வணக்கம்
தற்போதைய நேரத்தில் எந்த ஒரு கட்சியையோ அமைப்புகளையோ தனி மனிதரையோ கொச்சையாக விமர்சனம் செய்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
நம்மீது பாயும் சட்டங்களை சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாம் எதிர்கொள்வோம். இவற்றால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏதுவாக எதுவும் அமைய வேண்டாம் என்ற நோக்கத்தோடு கேட்டுக்கொள்கிறோம்.
நம்மை வெறுப்பு ஏற்றவும் பல சிக்கல்களில் ஆளாகவும் நமக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சில சிக்கல்களை உருவாக்க சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் தோழர்கள் கவனமுடன் செயல்பட கேட்டுக்கொள்கின்றோம்.
அவரவர் வயதிற்கேற்ப கோபமோ, ஆத்திரங்களோ இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் நாம் கண்ணியமாக செயல்படவும் விமர்சிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பாடுகளையும், அடுத்தடுத்த செயல்களையும் மாவட்ட பொறுப்பாளர்களை கலந்துகொள்ளாமல் சமூக வலைதளத்தில் செய்தியை பதிய வேண்டாம்.
பொறுப்பாளர்கள்
தி.வி.க.
சேலம் மாவட்டம்