நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

18.06.2023 ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் நங்கவள்ளி நகர கழக கலந்துரையாடல் கூட்டம் தோழர் காவை ஈசுவரன் , தலைமைக் குழு உறுப்பினர் தலைமையில், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்  இல்லத்தில் கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கியது.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

1). தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளான நங்கவள்ளி ஒன்றியத்தில் தோழர்கள் பிரபாகரன், அருள்குமார், நாகராஜ் ஆகியோரது தலைமையில் கணக்கெடுப்பு நடத்துவதெனவும், கொங்கனாபுரம் ஒன்றியத்தில் தங்கதுரை, கண்ணன், கவியரசு ஆகியோரது தலைமையிலும், மேச்சேரி ஒன்றியத்தில் கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர் ஆகியோரது தலைமையிலும், தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளை கண்கெடுப்பு நடத்தி வருகிற ஜூன் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

 

2) எது திராவிடம், எது சனாதனம் என்னும் தலைப்பில் கிராம பிரச்சார கூட்டங்கள் நங்கவள்ளி ஒன்றிய கிளைக் கழகத்தின் சார்பில் முதல்கட்டமாக 10 கிராமங்களில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

 

3) நங்கவள்ளியில் உள்ள பாசக்குட்டை  பகுதியில் வசிக்கும் அருந்ததியின மக்கள் வெகுநாட்களாக போராடியும், நெடுஞ்சாலை ஓரமாக இறந்தவர்களின் உடல்களை புதைக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான மயான வசதியை ஏற்படுத்தி தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் திராவிடர் விடுதலைக் கழகம் முறையிட்டு அவர்களுக்கான மயான வசதியை உறுதி செய்வோம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

கலந்து கொண்டோர் : காவை ஈசுவரன், கிருஷ்ணன், தங்கதுரை, நாகராஜ், அருள்குமார், சந்திரசேகர், கவியரசு, தமிழருவி, பிரபாகரன், கண்ணன், பேரறிவாளன், சிவா.

 

தோழர்களுக்கு தேநீர், வடை லலிதா அவர்கள் வழங்கினார். சிவா நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

You may also like...