இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.

 

முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார்.

பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார்.

கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “இந்திய அரசியலும் –  பார்ப்பனியமும்” என்கிற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.

கருத்தரங்கை திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு தொகுத்து வழங்கினார். மாநகர அமைப்பாளர் முத்து நன்றி கூற கருத்தரங்கம் நிறைவுபெற்றது.பிறந்தநாள் விழா – பெயர் சூட்டு விழாவின் மகிழ்ச்சியாக வசந்தி – முத்து இணையரின் மூத்த மகன் வெற்றிமாறன் தான் சேமித்து வைத்திருந்த ரூ.3000-யை கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” வளர்ச்சி நிதியாகக் கழகத் தலைவரிடம் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

You may also like...