களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது.

சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.

பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும்.

– கொளத்தூர் மணி

(தலைவர்)

விடுதலை இராசேந்திரன்

(பொதுச் செயலாளர்)

பெரியார் முழக்கம் 07072022 இதழ்

You may also like...