Category: தீர்மானங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார். நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்… 1 பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. 2 தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை...

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு  கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....