எழுச்சியுடன் நடந்த செயலவை
சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்டம் மே 21 காலை 10:30 மணியளவில் குகை ஜிபி கூடத்தில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூறத் தொடங்கியது. மாநகரச் செயலாளர் ஆனந்தி வரவேற்புரையாற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவை நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் . 30 தோழர்கள் மாநாட்டின் வெற்றி, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து கருத்துகளை முன் வைத்தனர். மாநாட்டின் வரவு செலவு கணக்குகளையும் அவையின் முன் வைத்தனர், புரட்சிப் பெரியார் முழக்கம் வரவு செலவுக் கணக்குகளை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவையில் முன் வைத்தார். 85 தோழர்கள் செயலவையில் பங்கேற்றனர். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய செயலவை உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடித்தது. இறுதியாக சேலம் மாநகரத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
தோழர்கள் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் 25052023 இதழ்