ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ் ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம் பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

சென்னை : சேலத்தில் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு! அழைப்பிதழை, மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ள மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மருதையன், தபெதிக பிரச்சார செயலாளர் சீனி.விடுதலை அரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் ராஜன், யூடியூபர்கள் மைனர் வீரமணி, மகிழ்நன் உள்ளிட்ட தோழர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகத் தோழர்கள் வழங்கினார்கள்.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை மயிலைப் பகுதித் தோழர்கள்  இராவணன், மனோகர், பிரவீன், அஜித் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

சேலம் :  திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கூ.ஆ. செல்வகணபதியை நேரில் சந்தித்து கழக மாநில மாநாட்டு அழைப்பிதழை கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்ட பொறுப்பாளர்கள் டேவிட், சக்திவேல், கோவிந்தராஜ், அன்பு, சம்பத்குமார், பாலு, குமார் ஆகியோர் வழங்கினார்கள்.

மாநாட்டுக்கான நன்கொடை திரட்டும் பணி : 10.4.2023 அன்று சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் மதியம் 3 மணிக்கு கீதா, சரஸ்வதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்களும் மாநாட்டு நிதியை மிகவும் உற்சாகத்தோடு வழங்கினார்கள்.  ரூ.24,020 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : மேட்டூர் பகுதி : கோவிந்தராஜ், கிட்டு, தேவராஜ், முத்துராஜ், அம்ஜத்கான், சம்பத், திவாகர், பிரபாகரன், விஜய்.

மேட்டூர் ஆர்.எஸ் பகுதி : ஜெகதீஷ், நாகராஜ், பெர்னாட், சுசீந்திரன், ராமச்சந்திரன். நங்கவள்ளி பகுதி : குமார், இந்திராணி, அருள், அன்பு. கொளத்தூர் பகுதி : அறிவு, சரஸ்வதி, சுதா, மாரி செட்டி.

10.04.2023 அன்று மேட்டூரில் நடைபெற்ற தனிநபர் வசூலின் போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் ரூ.25,000-யை மாநாட்டு நன்கொடையாக வழங்கினார். பல் மருத்துவர் சந்திரமோகன் ரூ.2000-யை நன்கொடையாக வழங்கினார்.

தாரமங்கலம் : 11.04.2023 செவ்வாய் காலை 10 மணிக்கு சேலம் கிழக்கு மாவட்ட வசூல் குழுவின் சார்பில் குடந்தை பாலன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் தலைமையில் காலை 10 மணிக்கு தாரமங்கலம், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் கடைவீதி வசூல் பணி நடைபெற்றது.

பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கண்ணையன் பெரும் தொகை அளித்து ஊக்கமளித்தார். கொல்லப்பட்டி பகுதிகளில் வணிகர்கள் குறிப்பாக பெண்கள் ஆதரவு பெருமளவு இருந்தது மகிழ்ச்சி அளித்தது.  ரூ.25,000 நன்கொடை திரட்டப்பட்டது. கிருஷ்ணன், குடந்தை பாலன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், தங்கதுரை, சேலம் சரவணன், திவ்யா, சேகர், பிரபாகரன், நங்கவள்ளி கண்ணன், சேலம் கனிமொழி, வனவாசி உமாசங்கர், கவியரசு, ராமசந்திரன், சேலம் சீதா, சேலம் கோமதி ஆகியோர்.

12.04.2023 புதன் கிழமை காலை 10 மணிக்கு சேலம் கிழக்கு மாவட்ட வசூல் குழுவின் சார்பில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் கடைவீதி வசூல் நடைப்பெற்றது. ரூ.7,580 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : கிருஷ்ணன், குடந்தை பாலன், பவளத்தானூர் தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், தங்கதுரை, பிரபாகரன், திவ்யா, கோபி, (குட்டீஸ் நிலா, தமிழ்) , உமா சங்கர், அருள் பாண்டியன், அஜித் குமார், விஜய், அஜய், கார்த்தி.

சங்ககிரி : 13/4/23 அன்று சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் தனிநபர் வசூல் சங்ககிரி பகுதியில் காலை 12 மணிக்கு சங்ககிரி செந்தில்குமார், நாகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என கழக ஆதரவாளர்கள் மாநாட்டு நிதியை வழங்கி ஆதரவு தெரிவித்தனர். தனிநபர் வசூலாக ரூ.16,710 திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : மேட்டூர் பகுதி : முத்துராஜ், விஜய், மேட்டூர் ஆர்.எஸ் பகுதி : சுசீந்தர், ஜெகதீஷ், நாகராஜ், ராமச்சந்திரன், பெர்னாட், நங்கவள்ளி பகுதி : குமார், உமா சங்கர், அருள், இந்திராணி, ராஜேந்திரன், அன்பு. கொளத்தூர் பகுதி : அறிவுசெல்வன், சுதா, சரஸ்வதி, கோபால், சங்ககிரி செந்தில்குமார், வெள்ளரி வெள்ளி பகுதி : விஜய்பாபு. வழக்கறிஞர் வித்யாபதி வசூலில் கலந்துகொண்ட  தோழர்களுக்கு அசைவ உணவு வழங்கி சிறப்பித்தார்.

இளம்பிள்ளை : 15.04.2023 சனிக்கிழமை அன்று கடைவீதி வசூல், இளம்பிள்ளை பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை தலைமையில் காலை 11 மணியளவில் தொடங்கியது.

தறி தொழிலாளர்கள், ஜவுளி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கி ஆதரவு தெரிவித்தனர். இளம்பிள்ளையில் ரூ.18,700 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : இளம்பிள்ளை பகுதி : கோபி, தங்கதுரை, திவ்யா, பெரியார் விழுது நிலா, தமிழ், ரவி, ரமேஷ், குட்டி, குப்புசாமி, சேகர், மணி, சதாசிவம். சேலம் மாநகரம் : ஆனந்தி, தேவராஜ், செல்வமணி,  அருள் பாண்டியன், பர்கேஷ், சந்தோஷ்.

நங்கவள்ளி பகுதி : கிருஷ்ணன், பிரபாகரன், உமாசங்கர், நந்தினி. தாரமங்கலம் பகுதி : குடந்தை பாலன்.

மதுரை : மதுரை மேலூர் பகுதிகளில் கழகத் தோழர்கள் மாநாட்டு சுவர் விளம்பரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி இணையர் பொன் வசந்த், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அதிமமுக பசும்பொன் பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி முத்துகுமார், விசிக தாமரை வளவன், மருத்துவர் சௌந்தரபாண்டியன் ஆகியோரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை கழகத் தோழர்கள் வழங்கினார்கள்.

திண்டுக்கல் : மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்  உள்ளிட்டோரை சந்தித்து கழகத் தோழர்கள் மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள்..

பின்பு ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் கடைவீதி வசூலை தோழர்கள் மேற்கொண்டனர்.

கோவை : திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள், பகுதி கழக செயலாளர்கள், மண்டல தலைவர்கள் மீனா லோகு, தெய்வானை தமிழ்மறை, முத்து மாணிக்கம், திலக் பாபு, துரை செந்தமிழ் செல்வன், தளபதி மனோஜ் ஆகியோரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 20042023 இதழ்

You may also like...