மன்னார்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !
மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை. மன்னார்குடி ஏப். 15. புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு கூறியது, புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் முழுஉருவ வெண்கல...
