ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் புகார் மனு சென்னை 23032016

வாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு
‘தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும் ,
அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது ,
வேலை கொடுக்க கூடாது ,
சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி
நடு தெருவில் நிறுத்த வேண்டும்’
என்று பேசியுள்ள M.R.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார்,மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் தோழர் பிரகாசு,தோழர் செந்தில் FDL,தோழர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.

12801560_1717821921835034_5530159727280484156_n 1915825_1717821841835042_5471227058634143586_n

You may also like...