சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள்.

காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.

இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது.

இப்பயிலரங்க ஏற்பாட்டினை சூரங்குடி ஒன்றியத் தோழர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

தோழர்களின் ஆர்வத்தை பாராட்டி தூத்துக்குடி தொழிலதிபர் பெரியார் பற்றாளர் பாண்ட்ஸ்.ஜெயகிருஷ்ணன் சூரங்குடி தோழர்களுக கு 27 பெரியார், பகுத்தறிவு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். இதை மாநில பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் சூரங்குடி ஒன்றியத் தலைவர் தோழர். மாரிச்சாமியிடம் வழங்கினார்.

இந்த பயிலரங்கத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி.அம்புரோசு, தூ.டி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், தூ.டி. மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், தூ.டி.மாவட்ட துணைத் தலைவர் பால்ராசு, தூடி மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், மற்றும் தூத்துக்குடி தோழர்கள் செல்லத்துரை, சந்திரசேகர், ஜெயாஸ்டின், தமிழ்நாடு மாணவர் கழக தூடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், நெல்லை மாவட்ட கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விளாத்திகுளம் தோழர்கள் முத்துக்குமார், விக்னேஷ்வரன், சூரங்குடி ஒன்றிய தலைவர் தோழர். மாரிச்சாமி, தோழர்கள் முத்துச்செல்வம், கணேசமூர்த்தி, முத்துராஜ், முத்துகுமார், திராவிட மணி, திலீபன், மாரிமுத்து, சதிஷ்குமார், சக்திவேல் போன்ற எண்ணற்ற தோழர்கள் கலந்து கொண்டனர்.

1507772_1717231231894103_4391508570420037465_n 10649983_1717231428560750_5820167871418304620_n 12642645_1717231111894115_4610363620232314251_n 12718135_1717231348560758_7621022020943079653_n 12832513_1717231091894117_858237516711003107_n

You may also like...