மன்னார்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும்
அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை.

மன்னார்குடி ஏப். 15.
புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு கூறியது, புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் முழுஉருவ வெண்கல சிலைகளை அமைக்க வேண்டும். அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்கும் வழி என்கிற புத்தகத்தை உயர்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட மத்திய சட்ட ஆணையம் வடிவமைத்து கொடுத்திருக்கின்ற திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை உடனடியாக தனி சட்டமாக இயற்ற வேண்டும். ஜாதி மறுப்பு திருமண செய்கின்ற தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடுவழங்கவேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் இரா.இரமணி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ஆதவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நெடுவை சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக்கழக ஒன்றிய செயலாளர்கள் சேரன்ரமேசு, தென்பரை பன்னீர்செல்வம், நீடாசெந்தமிழன், விடுதலைசிறுத்தைகள் மன்னை கிழக்கு ஒன்றியம் ஜெயராஜன், மேற்கு ஒன்றியம் ஜெயக்குமார், கோட்டூர் ஒன்றியம் முருகையன், மன்னார்குடி நகர செயலாளர் இந்திரஜித், துணை செயலாளர் மணிகண்டன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

13000118_1730439650573261_5428458376495814887_n

You may also like...