அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா வேலூர்

14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சியோடு நடத்தப்பட்டது.

நிகழ்வு ஜாதி ஒழிப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் அவர்களின் நன்றி உரையாற்றினார்
களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள்
IMG_3085 IMG_3089 IMG_3091 IMG_3093 IMG_3096 IMG_3097 IMG_3101 IMG_3102 IMG_3107 IMG_3118 IMG_3131 IMG_3140 IMG_3142

You may also like...