முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திராவில் அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ”முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்.”

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 7ந்தேதி ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையால் அநியாயமாய் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களின் முதலாமாண்டு நினைவும், அவர்கள் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான தோழமை உறுதி ஏற்பு நாளும்,
7-4-2016 வியாழன் அன்று, திருவண்ணாமலை சாரண சாரணியர் பயிற்சிக் கூடத்தில், மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்தது.

நினைவேந்தலைத் தொடர்ந்து நடந்த தோழமை உறுதியேற்பு நிகழ்வு மக்கள் கண்காணிப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். உரைகளில் இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன.

 12523845_1727609577522935_5081292100658172351_n 12923166_1727609667522926_6369286720652366302_n 12923222_1727609454189614_3939463152322062198_n 12923244_1727609844189575_3230075908752374516_n 12923347_1727609670856259_5298147213775380394_n 12933154_1727610000856226_4923335567892454384_n 12933171_1727609504189609_5310424530993951466_n 12974503_1727609870856239_2268739447405600878_n 12987167_1727609994189560_2111280638083765799_n

You may also like...