ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இணையரை சந்தித்து ஆறுதல்

நேற்று 04.03.2016 திங்கள் அன்று ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் இணையர் கவுசல்யா அவர்களைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் சந்தித்து ஆறுதலும்,தைரியமும் கூறினர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் எனும் ஊரில், கொல்லப்பட்ட தனது கணவர் சங்கர் அவர்களின் வீட்டில் வாழ்ந்து வரும் கவுசல்யா அவர்களைத் தோழர்கள் சந்தித்தனர்.

தலை,கைகள் மற்றும் உடல் முழுவதும் ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார் கவுசல்யா. சங்கர் வீட்டில் கவுசல்யா வாழக்கூடாது எனும் ஒரே நோக்கத்தில் ஜாதிவெறியர்கள் சங்கரைப் படுகொலை செய்து கவுசல்யாவை கொடூரமாகத் தாக்கினார்களோ அவர்களின் நோக்கத்திற்கு எதிராக நெஞ்சுரத்துடன் சற்றும் அஞ்சாமல் அதே சங்கர் வீட்டில் மனதைரியத்துடன் திரும்ப வந்து வாழ்கிறார் கவுசல்யா.

இனி ‘நான் சங்கர் வீட்டில்தான் வாழ்வேன்’ என்றும் ‘வேலைக்கு சென்று சங்கரின் அப்பாவையும் தம்பிகளையும் காப்பாற்றுவேன்’ என்றும் ‘சங்கர் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து ஜாதிமறுப்புத் திருமணம் செய்யும் இணையர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்வேன்’ எனவும் நாளிதழ்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கவுசல்யாவின் இந்த மன தைரியத்தைப் பாராட்டி, கழகம் என்றும் அவருக்குத் துணைநிற்கும் எனவும் எந்நேரமும் கழகத் தோழர்களை உதவிக்கு அழைக்கலாம் எனவும் தோழர்கள் உறுதியளித்தனர்.

இந்த சந்திப்பின் போது கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுடன் கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மடத்துக்குளம் மோகன், கவிஞர் கனல்மதி, உடுமலை அருட்செல்வன், தனபால்,முத்து,பரிமளராசன் ஆகிய தோழர்கள் உடனிருந்தனர்

1936337_1726289717654921_3084705370947237789_n 12512739_1726289737654919_2187026048834320320_n 12524250_1726289840988242_4528619692808230893_n 12670342_1726289607654932_1868155431670806804_n 12928316_1726289674321592_407920499083233957_n 12931199_1726289707654922_4679460008725444758_n 12961695_1726289797654913_4557397021040845972_n 12963701_1726289630988263_4353740611254692391_n

You may also like...