தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில்
கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்களும்

”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி”
எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.

கழக தோழர் அன்னூர் முருகேசன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

7679_1716439185306641_9157111007984921677_n 8744_1716439235306636_8460572664887937168_n 945285_1716439505306609_6347382759705686641_n 1484243_1716439628639930_8213663737439154767_n 1606865_1716439535306606_4992823204839302839_n 1930642_1716439045306655_4540105846922938105_n 12109185_1716439098639983_1382616944137440728_n1918365_1716439588639934_6263834599535135836_n

You may also like...