ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத் துணை செய்ய உருப்படியாய் நாம் கலந்தாலோசிக்கத் தவறினோம். இன்று சங்கர்!

           இனியாகிலும் விழித்துக் கொள்வோம். இணைந்து யோசிப்போம். ஆக்கப்பூர்வமாய் இனியொரு இளவரசனோ, கோகுல்ராஜோ, சங்கரோ பலியாகாமல் இருக்க உரிய களம் அமைப்போம். இதற்கான தொடக்கமே இந்தப் பொதுக் கூட்டம்.
           சங்கருக்கு வணக்கம்! கெள்சல்யாவுக்குத் தோழமை! – இதை வலிமையோடு வெளிப்படுத்த ஒன்றுகூட அழைக்கிறோம்.

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக எனும் கோரிக்கையை முன் வைத்து தமிழ்தேசிய விடுதலை இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பேசுகிறார்கள்.

நாள் : 22.03.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

இடம் : இளவரசன்,கோகுல்ராஜ் அரங்கம்,
அம்பேத்கர் திடல், நூறடிசாலை, லக்ஷ்மன்சுருதி சிக்னல் அருகில், வடபழனி. 9865107107

1929351_1716422758641617_6742229002175141866_n12003231_1683563675225307_8495337722971239828_n

You may also like...