மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு

01042016 வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் மறைந்த ‘மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு’ நடைபெற்றது.

காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் க.ஈசுவரன் தலைமை ஏற்றார். காவலாண்டியூர் சித்துசாமி, கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.சுந்தரராசன் (அ.தி.மு.க), அஞ்சல் துறை சிக்கப்பசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், மா.வரதராசன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார்.

மேலும் கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.பழனிசாமி, எல்.ஐ.சி. முகவர் ரகுபதி, தி.முக. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேவராசன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, கழக செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
இறுதியாக மறைந்த ‘மா.வரதராசன் அவர்களின் தகப்பனாரும், கழகத் தோழருமான மாரி (எ) மாரியப்பன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

12417787_1725440234406536_1176055667967676690_n 12439102_1725440424406517_6359988289394990126_n 12512328_1725440504406509_1171543941673998675_n 12670354_1725440261073200_6027816199899954353_n 12923195_1725440394406520_6649152930557163866_n 12923290_1725440354406524_3869173236021812206_n 12933085_1725440334406526_2159039486771024063_n 12961507_1725440524406507_6078154024651194117_n 12961528_1725440597739833_3760648254343944847_n

You may also like...