செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை திருப்பூர் 16032016 – நிழற்படங்கள்
திருப்பூரில்,
ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது.
• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும்.
• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
• ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
• ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும்.
எனும் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்,1 குழந்தை உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில்
துரைசாமி,மாநில பொருளாளர்,ரத்தினசாமி,மாநில அமைப்புச் செயலாளர்,முகில்ராசு,மாவட்ட செயலாளர், நீதிராசு, மாநகரத் தலைவர்’கோவிந்தராசு,பல்லடம் நகரத்தலைவர்,அகிலன், திவிக திருப்பூர்,சூரிய குமார்,சேலம் மேற்கு மாவட்டத்தலைவர்,
வைரம்,நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்,சாமிநாதன்,நாமக்கல் மாவட்ட தலைவர்,சண்முகபிரியன்,ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்,செல்வராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர்,
குமார்,ஈரோடு புறநகர் மாவட்ட தலைவர், வேணுகோபால், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்,நேருதாஸ், கோவை மாநகர செயலாளர்,நிர்மல்குமார்,கோவை மாவட்டச் செயலாளர்,ராமச்சந்திரன்,கோவைமாவட்டத்தலைவர்,
பன்னீர் செல்வம்,சூலூர் ஒன்றியத்தலைவர்,அன்னூர் முருகேசன், திவிக,கிருஷ்ணன்,கோவை மாவட்ட பொருளாளர்,
ரமேஷ்,நம்பியூர் ஒன்றியத் தலைவர்,மூர்த்தி சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர்,சரவணன்,நாமக்கல் மாவட்டசெயலாளர்,
முத்துப்பாண்டி,நாமக்கல் மாவட்ட பொருளாளர், அருண், திருவள்ளுவர் நற்பணி மன்றம்,அருளானந்தம்,கோபி ஒன்றிய செயலாளர்,அரிதாசு,ஆனைமல ஒன்றிய அமைப்பாளர்,
ஆனந்த்,விவேக் சமரன்,திவிக ஆனைமலை ஆகியோர் உள்ளிட்ட 84 பேர் கைது செய்யப்பட்டு செங்குந்தர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.